Friday, 16 March 2018

Sixth Second Term-Science(Tamil)

செல்லின் அமைப்பு:
1.நமது உடலின் அடிப்படைக் கட்டமைப்பு செல் ஆகும்.
2.செல் என்பது உயிரினங்களின் அடிப்படை அமைப்பும் செய அலகும்  ஆகும்.
3.செல்லை கண்டுபிடித்தவர் ராபர்ட் ஹூக்.
4.லத்தீன் மொழியில் செல்லுக்கு சிறிய அறை  என்று பொருள்.
5.சுவரின் செங்கல்லைப் போன்ற அமைப்பு உடையது வெங்காயத் தோலின் செல்கள்.
6.ஒரு செல்லில் 12 முதல் 13 உள்ளுறுப்புக்கள் வரை உள்ளன.
7.சவ்வினால் சூழப்பட்ட  நுண் உறுப்புகள் இல்லாத
செல்லை ப்ரோக்கரியாட்டிக் செல்  என்று  அழைப்பார்கள்.
8.சவ்வினால் நன்கு சூழப்பட்ட நுண் உறுப்புகள் கொண்ட செல்லை யூக்கரியாட்டிக் செல் என்று  அழைப்பார்கள்.
9.தாவர,விலங்கு செல்கள் அடிப்படை அமைப்பில் ஒத்து  காணப்படுகின்றன.
10.தாவரம் மற்றும் விலங்கு மாறுபட்ட செல்களைக் கொண்டன.

குறிப்பு:தாவர செல்லில் உள்ள கணிகங்கள்,விலங்கு செல்லில் சென்ட்ரோசோமால் மாற்றப்பட்டுள்ளன.




விலங்கு செல்:
11.செல்லைச் சுற்றியுள்ள படலம் பிளாஸ்மா படலம்.
12.பிளாஸ்மா படலம் பொருள்கள்  செல்லுக்குள் செல்வதையும் & வெளியேறுவதையும் கட்டுப்படுத்துகிறது.
13.புரோட்டோபிளாசம் ஒரு கூழ்.
14.புரோட்டோபிளாசம் தன்னுள்  சைட்டோபிளாசம்&உட்கருவைக் கொண்டது.
15.புரோட்டோபிளாசம் என்று பெயரிட்டவர் ஜே.இ.புர்கின்ஜீ. 
16.புரோட்டோபிளாசம் மற்றும் உட்கருவிற்கு நடுவில் உள்ளது  சைட்டோபிளாசம்.
17.சைட்டோபிளாசம்  கார்போஹைடிரேட்&புரதத்தால் ஆனது.
18. .சைட்டோபிளாசம் உள்ளுறுப்புகள்&கில்லுப்புத்துளிகளைக்  கொண்டது.
19.செல்லின் கட்டுப்பட்டு மையம் என்பது உட்கரு (கோள வடிவம்).
20.ஒரு தலைமுறையில் இருந்து அடுத்தத் தலைமுறைக்கு மரபு சார்ந்த பண்புகளை உட்கரு எடுத்துச் செல்கிறது.
21.செல்லின் ஆற்றல் மையம் என்பது மைட்டோகாண்ட்ரியா.
22.மைட்டோகாண்ட்ரியாவின் வேலைகள் செல்லின் சுவாசம்&உணவை ஆற்றலாக மாற்றுதல்.
23.குழல் போன்ற அமைப்பை உடையது கோல்கை உறுப்புகள்.
24.கோல்கை உறுப்புகளின்  வேலைகள் உணவு செரிமானம்&லைசோசோம்களை உருவாக்குவது.
25.கோல்கை உறுப்புகள் உணவில் இருந்து புரதத்தைப் பிரிக்கினறன.
26.தாவர செல்களில் கோல்கை உறுப்புகளை டிக்டியோசோம்  என்று அழைப்பர்.
27.எண்டோபிளாச வலை செல்லின்  ஒரு பகுதியிலிருந்து இன்னொரு இடத்திற்குப் பொருள்கள்  செல்ல உதவுகிறது.
28.ரிபோசோம்கள் செல்லின் புரதத்தொழிற்சாலை(புள்ளி வடிவம்) என்று அழைக்கப்படுகின்றன.
29.செல்லைப் பாதுகாப்பது லைசோசோம்(நுண்குழல் அமைப்பு).
30.லைசோசோம் செல்லின் தற்கொலைப் பைகள் என்று அழைக்கப்படுகின்றன.
31.குச்சி வடிவிலும் உட்கருக்குப் பக்கத்திலும் இருப்பது சென்ட்ரோசோம்.
32.சென்ட்ரோசோமின் முக்கிய வேலை செல் பிரிதல்.
34.வெளிநீல நிறமுடைய குமிழிகள் போல் இருப்பது நுண் குமிழ்கள்.
35.நுண் குமிழ்கள் உள் அழுத்தத்தை யை ஒரே மாதிரி பேணுகின்றன.




தாவர செல்:
36.தாவர செல் விலங்கு செல்லை விட உறுதியாக இருப்பதற்குக்  காரணம் செல்சுவர்.
37.செல்சுவரின் பணி உள்ளுறுப்புகளைப் பாதுகாப்பது.
38.நிறமிகள்  கணிகங்கங்களில் காணப்படுகின்றன.
39.மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 6,50,00,000.
40.எலும்புகள் ஈரப்பசை அற்ற  சிறப்பு செல்களால் ஆனவை.
41.சிவப்பு செல்களைக் கண்டுபிடித்தவர் ஆன்டன் வான் ளுவன்ஹாக்.
42.விலங்கு செல்லில் மிக நீளமான செல் நிரம்பு செல்  மற்றும் மிக கடினமான செல் எலும்பு செல்.
43.குளோரோபிளாஸ்ட பச்சை நிறத்திலும் உள்ளது.அது தண்டு மற்றும் இலைகளுக்கு நிறத்தை தருகிறது.
44.குரோமோபிளாஸ்ட்  ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது.மலர் & பழங்களுக்கு வண்ணம்  கொடுக்கிறது.
45.லிகோபிலஸ்ட்  நிறமற்றது.இது வேர்ப்பகுதி மற்றும் தரைக்கு கீழ் தண்டு வளர உதவுகிறது.
நினைவில் கொள்ள வேண்டிய இடங்கள்:
  • கோல்கை உறுப்புகள் குழல் வடிவம் கொண்டது.
  • ரிபோசோம்  புள்ளி வடிவம் கொண்டது.
  • லைசோசோம் நுண்குழல் அமைப்புக் கொண்டது.
  • சென்ட்ரோசோம் குச்சி வடிவம் கொண்டது.
  • நுண் குமிழ்கள் வெளிநீலம் போன்று இருக்கும்.



பொருள்களைப் பிரித்தல்: 
1.திண்ம கலவைகளைப் பிரிக்கும் முறைகள் கையால் பிரித்தல்,தூற்றுதல்,சலித்தல் மற்றும் காந்தப் பிரிப்பு முறை ஆகும்.
2.நீரில் கரையாத திண்ம கலவைகளைப் பிரிக்கும் முறைகள் தெளிய வைத்தால்,தெளிய வைத்து இறுதல் மற்றும் வடிகட்டுதல்.
3.நீரில் கரையும்  திண்ம கலவைகளைப் பிரிக்கும் முறைகள் ஆவியாக்குதல் மற்றும் குளிர்வித்தல்.




ஆற்றலின் வகைகள்:
1.வேலை செய்யத் தேவையான திறன் ஆற்றல் ஆகும்.
2.ஆற்றலை ஜுல் என்னும் அலகால் குறிப்பிடுகிறோம்.

No comments:

Post a Comment